தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் அருகே நாகமரை பரிசல் துறையில் இருந்து அக்கரைக்கு பரிசல் துறை வரை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் பரிசல் இயக்க மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை டென்டர் விடுவது வழக்கம். தருமபுரி மாவட்டம் மற்றும் சேலம் மாவட்டம் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் மூன்று ஆண்டுகள் தர்மபுரி மாவட்டத்திற்க்கும் மூன்று ஆண்டுகள் சேலம் மாவட்டத்திற்க்கும் பிரித்து மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு பொது டென்டர் விடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மேட்டூர் வட்டம் கொளத்தூர் பிடிஓ ஆபீஸில் டெண்டர் விடப்பட்டது அந்த டெண்டரை இரண்டு மாவட்டங்களிலும் ஒரே தனிநபர் காலம் காலமாக நாகமரை பகுதியைச் சேர்ந்த வீரப்பன் மற்றும் அவருடைய உறவினர்கள் பினாமிகள் இந்த டெண்டரை எடுத்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தர்மபுரி சேலம் ஆகிய இரண்டு மாவட்டங்களையும் இணைக்கக்கூடிய இந்த பரிசல் பயணமானது தர்மபுரி மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள நாகமரை மற்றும் ஏரியூர் நெருப்பூர், பென்னாகரம் பகுதியை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து இந்த பரிசல் பயணம் மூலமாக கல்லூரிக்கும் பள்ளிகளுக்கும் தினமும் அன்றாட பணிக்காக செல்பவர்கள் மற்றும் விவசாய பொருட்களை சந்தைப்படுத்தவும் காவிரி ஆற்றைக் கடந்து தங்கள் இருசக்கர வாகனங்களைளையும் பரிசலில் ஏற்றி பயணித்து வருகின்றனர். மேலும் சேலம், மேட்டூர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு விவசாயிகள் விவசாய பொருட்களை எடுத்து செல்கின்றனர்.
இதேபோல் அப்பகுதிக்கு சென்று வேலை செய்துவிட்டு மீண்டும் மாலை நேரங்களில் பரிசல் மூலமாகவே தங்களது கிராமத்திற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் பேருந்தில் பயணம் செய்தால் சுமார் 70 கிலோமீட்டர் சுற்றி வரவேண்டிய நிலை உள்ளதால் பொதுமக்கள் காவிரி ஆற்றில் குறுகிய நேரத்தில் பரிசல் பயணம் மூலம் கடந்து செல்கின்றனர். நீண்ட நாட்களாக தமிழக அரசு உயர் மட்ட பாலம் கட்டப்படும் என அறிவித்திருந்த நிலையில் இதுவரை அரசு முன்வர வில்லை என்பதே அப்பகுதி மக்களின் வேதனையாக உள்ளது.
இந்த நிலையில், மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு நபருக்கு 10 ரூபாயும் இரண்டு சக்கர வாகனத்திற்கு 20 ரூபாயும் அரசு நிர்ணயம் செய்துள்ளது ஆனால் அரசு அறிவித்த தொகையை விட இரண்டு மடங்கு உயர்த்தி வசூல் செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதன்மூலம் பொதுமக்கள் பஸ்சில் செல்லும் கட்டணத்தை விட பரிசலில் செல்லும் கட்டணம் அதிகமாக உள்ளது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே இந்த பரிசல் துறை ஏலத்தை ரத்து செய்து அரசாங்கமே இந்த பரிசல் துறையை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் வேதனையுடன் கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் அவர்கள் தெரிவித்த போது மூன்று கிலோமீட்டர் தூரம் மேட்டூர் அணை நீர் தேக்கப்பகுதியான காவிரி ஆற்றில் பரிசல் மூலம் பயணம் செய்ய பொதுமக்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் அழைத்துச் செல்வதாகவும் அதிகாரிகள் யாரேனும் வந்தால் மட்டுமே பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதாகவும் குற்றம் சாட்டிவருகின்றனர் என்பது குருப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக