பாலக்கோடு பேரூராட்சியில் 1கோடி 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டிடம் கட்ட பூமி பூஜை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 30 டிசம்பர், 2024

பாலக்கோடு பேரூராட்சியில் 1கோடி 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டிடம் கட்ட பூமி பூஜை.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சிக்கு மூலதன மேம்பாட்டு நிதியில் இருந்து  1 கோடி 39 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்யும் நிகழ்ச்சி பேருராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில்  நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தார்.


பாலக்கோடு பேருராட்சி அலுவலகத்திற்க்கு புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு கடந்த அக்டோபர் 24ம் தேதி அரூரில் நடைபெற்ற அரசு விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து இன்று பேருராட்சி வளாகத்தில் பேருராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்கள் பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை துவக்கி  வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், கவுன்சிலர்கள் சாதிக்பாஷா, சரவணன், ரூஹித், பிரேமா, மோகன், ஜெயந்தி, லட்சமி, தீபா, ஆயிஷா, சிவசங்கரி நாகலட்சுமி, மோகன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad