பஞ்சப்பள்ளி அடுத்த கும்மனூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் 2 கோடியே 36 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 டிசம்பர், 2024

பஞ்சப்பள்ளி அடுத்த கும்மனூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் 2 கோடியே 36 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது..


தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்த கும்மனூர்  கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமிற்க்கு கலெக்டர் சாந்தி தலைமை வகித்து, 152  பயனாளிகளுக்கு  2 கோடியே 36 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இன்று  நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த் துறையின் சார்பில் 59 பயனாளிகளுக்கு 28 இலட்சத்து 32 ஆயிரம்  மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 36 பயனாளிகளுக்கு 4 இலட்சத்து 75 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் 40 பயனாளிகளுக்கு 2 கோடி 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய்  மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 17 விவசாயிகளுக்கு 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் நுண்ணுயிர் பாசனம் மற்றும் பண்ணைக் கருவிகளையும் என மொத்தம் 152  பயனாளிகளுக்கு  2 கோடியே 36 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய்  மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.


முன்னதாக, இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் வருவாய்த்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, தோட்டக்கலைத்துறை,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மகளிர் திட்டம், சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள். 


இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர்  கே.பி. அன்பழகன், கூடுதல் கலெக்டர் கௌரவ்குமார்,  தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, தாசில்தார் ரஜினி, துனை தாசில்தார்கள் எழில், ஜெகதீசன், நாராயனசாமி, அன்பு அனைத்து துறை   அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad