தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்த்தை முன்னிட்டு, வெள்ளி விழா – 2024 மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (23.12.2024) திருவள்ளுவர் புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டு, புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டார்கள்.
முன்னதாக, அய்யன் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச் சிலை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் வெள்ளி விழா சிறப்பாக கொண்டாட அறிவுறுத்தியதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் டிசம்பர் 23 இன்று முதல் 31 வரை திருவள்ளுவர் புகைப்படம் காட்சிப்படுத்தி திருக்குறளின் பெருமைகளை உணர்த்தும் நிகழ்ச்சி நடைபெறும்.
23.12.2024 இன்று மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவர் புகைப்படம் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 24.12.2024 அன்று "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம். 26.12.2024 அன்று திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி (1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்). 27.12.2024 அன்று வினாடி – வினா (9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்).
28.12.2024 அன்று "அன்பும் அறனும்" என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம். 29.12.2024 அன்று "உழுதுண்டு வாழ்வாரே" என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம். 30.12.2024 அன்று "குமரியில் அய்யன் வள்ளுவர் சிலையும் குறளில் அதிகாரவைப்பு முறையும்" என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி (6-ம் வகுப்பு முதல் 10- ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்). மேற்காணும் மூன்று போட்டிகளில் முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/- மற்றும் மூன்றாம் பரிசு ரூ.2000/- வீதம் ரொக்க பரிசும் மற்றும் சான்றிதழ் 31.12.2024 அன்று நடைபெறும் நிறைவு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி தகடூர் புத்தகப் பேரவை செயலாளர் மரு.இரா.செந்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஜோதிசந்திரா, மாவட்ட நூலக அலுவலர் திருமதி.அர.கோகிலவாணி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக