தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மங்களப்பட்டியில் வசித்து வரும் கூலி தொழிலாளி கண்ணன் (39), இவர் கடந்த 7-ஆம் தேதி இரவு வீட்டில் டி.வி.பார்த்து கொண்டிருந்தார். அப்போது டி.வி.யில் அதிக சத்தம் வருவதாக கூறி பக்கத்து வீட்டை சேர்ந்த சூர்யா (24) என்பவர் கண்ணனை கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கண்ணன் மற்றும் அவரது சகோதரர் நவீன்குமார்(20), ஆகியோர் இரும்பு ராடால் சூர்யாவை தாக்கி உள்ளனர், பதிலுக்கு சூர்யாவும் இரும்பு ராடால் இருவரையும் தாக்கி உள்ளார். இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கோடு காவல்துறையினர் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக