தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பாலக்கோடு நகர அமமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 37ம் ஆண்டு நினைவு தினம் அமமுக நகர செயலாளர் ஞானம் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு அமமுக சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட செயலாளர் மசிவுல்லா, விவசாய அணி நிர்வாகி சண்முகம், அவைத்தலைவர் எக்பால், ரங்கநாதன், குமார், மாசிலமனி, சுபான், பாப்ஜான், நிசார், கனேஷ்ன், நாகராஜ், நவாஸ், கவுஸ்க், லட்சுமணன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து பேருந்து நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் நகர இணை செயலாளர் மகேந்திரன் கன்னியப்பன், எல்லப்பன், நாகராஜ், ரகமத்துல்லா, மற்றும் அக்காட்சியின் கிளை நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக