பாப்பிரெட்டிப்பட்டியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 37வது நினைவு நாள் அனுசரிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 டிசம்பர், 2024

பாப்பிரெட்டிப்பட்டியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 37வது நினைவு நாள் அனுசரிப்பு.


பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக சார்பாக பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவு சிலைக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் வே.விஸ்வநாதன், மாவட்ட துணைச் செயலாளர் என் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் கே நல்லதம்பி ஆகியோர் தலைமையில்  மாலை அணிவித்து நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆர் புரட்சிராசன், அதிமுக  அவைத் தலைவர் குட்டி என்ற மதியழகன் பேரவை நகர செயலாளர் டி.  அழகரசன், பிரதிநிதி பாஸ்கரன், முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன்,  ராமன், கிளை செயலாளர்கள் கிருஷ்ணன், சங்கர், பிஎம் முருகன், பெருமாள், சம்பத், மணி, தொல்காப்பியன், ரவீந்திரன், செந்தில், சேகர், ஜெகதீசன், கென்னடி, ஸ்டுடியோ முருகேசன், காந்திநகர் ராமன், அதிமுக நிர்வாகிகள் ரமேஷ், சக்திவேல்,  மாதையன், நாகராஜ், பொன்னன், மணி, சீனு, ராமன், நசீர், மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர், நிகழ்ச்சிக்கான ஏற்பட்டினை நகர செயலாளர் தென்னரசு செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad