பென்னாகரத்தில் சுவாமி ஐயப்பனுக்கு 37 ஆம் ஆண்டு அபிஷேக ஆராதனை பூஜை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 10 டிசம்பர், 2024

பென்னாகரத்தில் சுவாமி ஐயப்பனுக்கு 37 ஆம் ஆண்டு அபிஷேக ஆராதனை பூஜை.


பென்னாகரத்தில் சுவாமி ஐயப்பனுக்கு 37 ஆம் ஆண்டு அபிஷேக ஆராதனை பூஜை, அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர் சார்பில் நடைபெற்றது.


பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலை முத்து விநாயகர் ஆலயத்தில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில், 37 ஆம் ஆண்டு அபிஷேக, ஆராதனை, அன்னதான விழா இன்று நடைபெற்றது. 


காலை 9 மணி முதல் 11 மணி வரை அபிஷேக பூஜைகளும், தொடர்ந்து அலங்கார, ஆராதனை பூஜைகளும், அதனை தொடர்ந்து பஜனையும் நடைபெற்றது. இந்த பூஜையில் பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


காலை முதல் இரவு வரை பொதுமக்கள் அனைவருக்கும் சிறப்பான அன்னதானம் நடைபெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, பென்னாகரம் நகர, அகில பாரத ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள், மற்றும் ஐயப்ப பக்தர்கள் மேற்கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad