தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் சூதாட்டம் நடைபெறுவதாக பாலக்கோடு டி.எஸ்.பி மனோகரன் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாலக்கோடு தேர்மூட்டி விநாயகர் கோயில் அருகே சூதாடி கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்ததில், கனம்பள்ளி தெருவை சேர்ந்த கிரிஜாசங்கர் (வயது. 72), மணிகண்டன் (வயது.42) அக்ராஹர தெருவை சேர்ந்த பேரின்பன் (வயது. 50), கோடியூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது .42) மேல்தெருவை சேர்ந்த வடிவேல் (வயது.47) என்பதும், இவர்கள் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்ததது அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த சீட்டு கட்டுக்கள் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக