இண்டுர் பகுதியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் 500 பேர் கட்சியில் இணைந்தனர் . - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 1 டிசம்பர், 2024

இண்டுர் பகுதியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் 500 பேர் கட்சியில் இணைந்தனர் .


தர்மபுரி மாவட்டம் தமிழக வெற்றி கழகம் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி இளைய வாக்காளர்கள் கழகத்தில் இணையும்.. விழா இண்டுர் விநாயகா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


இந்த  நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் தாபா சிவா தலைமை தாங்கினார்.   மாவட்ட இளைஞரணி தலைவர் விஜயகாந்த். முன்னில வைத்தனர்.இந்த நிகழ்ச்சி நல்லம்பள்ளி மேற்கு மேற்கு ஒன்றிய சார்பில் ஏற்பாடுகளை யூத் தேவா .ஈஸ்வரன் பிரகாஷ். ஆகியோர் செய்தனர் இந்த விழாவில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் இளைய வாக்காளர்கள் மற்றும் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர் கட்சியில் இணைந்த அனைவருக்கும் மாவட்டத் தலைவர் தாபா சிவா சால்வ் அணிவித்து மரக்கன்றுகளை வழங்கினார்.


இதில் மாவட்ட மகளிர் அணி தலைவி சத்யா, மாவட்ட நிர்வாகிகள் கோபி, முருகன், வீரமணி மற்றும் அணி தலைவர்கள் ஜி.முத்துக்குமார், கார்த்திகேயன், சுரேஷ், ராஜா, விமல்ராஜ், ஒன்றிய நிர்வாகிகள் ரஞ்சித் குமார், ராஜா, உலகநாதன், மேகநாதன், சுரேந்திரன், கவிதேவன், பாப்பிரெட்டிப்பட்டி செல்வம், சதீஷ், பாப்பாரப்பட்டி பேரூராட்சி தங்கராஜ், அரூர் நகர முதலைமுத்து, ஒன்றிய பொருளாளர் மாதேஷ், சிவக்குமார், விக்னேஷ், சக்திவேல், கலைவாணன், ரமேஷ், அருள், பிரசாந்த், ஆனந்த், முனியப்பன், புஷ்பராஜ், ஆனந்தன், அன்புமணி, பூவரசன் சண்முகம், மாரியப்பன், சத்யராஜ், முருகன் ஆகியோர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மாவட்டத் தலைவர் தாபா சிவா பேசும்போது, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதியிலும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டும் அதற்கு கட்சி தொண்டர்கள் கிராமம் கிராமமாக தமிழக வெற்றி கழகம் கொடியேற்ற வேண்டும் அனைத்து பகுதிகளில் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு செய்ய வேண்டும் அதைத் தொடர்ந்து கட்சி பணிகள் சிறப்பாக செய்து வாக்குகளை பெற வேண்டும். என்று பேசினார் இதில் தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad