பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக 3 எம்.எல்.ஏக்கள் உள்பட 570 பேர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 30 டிசம்பர், 2024

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக 3 எம்.எல்.ஏக்கள் உள்பட 570 பேர் கைது.


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் குற்றங்கள் மற்றும் தமிழகத்தில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்து திமுக அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக 3 எம்.எல்.ஏக்கள் உள்பட 570 பேர் கைது 
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்து தருமபுரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 எம்.எல்.ஏக்கள் உள்பட 570 பேர் கைது செய்யப்பட்டனர்.


தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்த தவறிய மற்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர். அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், எம்.எல்.ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் பொன்னுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார்.


ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, நிர்வாகி டாக்டர் அசோகன், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் பழனிசாமி, சங்கர், மோகன், செந்தில்குமார், கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பழனி, நீலாபுரம் செல்வம், மதிவாணன், வேலுமணி, சேகர், செந்தில்குமார், செல்வராஜ், முருகன், கோபால், செந்தில், விஸ்வநாதன், பசுபதி, மகாலிங்கம், செல்வம், தனபால், அன்பு, தங்கராஜ், நகர நிர்வாகிகள் அம்மா வடிவேல், அறிவாளி, சுரேஷ், பார்த்திபன், வேல்முருகன், பலராமன் மற்றும் பேரூராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 3 எம்.எல்.ஏக்கள் 20 பெண்கள் உள்பட 570 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் தர்மபுரியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad