தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, அடுத்த பஞ்சப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி 800 மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியை மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பாம்பே சக்திவேல் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பாலக்கோடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பஞ்சப்பள்ளி அன்பழகன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் அவர்கள் மாணவ மாணவிகளிடையே சிறப்புரையாற்றி கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புக்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் முருகன், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகர், வழக்கறிஞர் முருகன், ஒன்றிய பொருளாளர் துரை,விவசாய அணி ஏவி குமார்,கவுன்சிலர் கார்த்திகேயன்,மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் அருள் பிரகாஷ் மற்றும் சிவகுமார், மணிவண்ணன் தர்மன், முகுந்தன், புனிதா, சாதன், ஐ.டி.விங்க் தமிழ் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக