தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள தும்பலஅள்ளி இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 17 வயது மகள், காரிமங்கலம் அருகே உள்ள பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியும் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தமிழ்மாறன், (வயது.22) என்ற வாலிபரும் காதலித்து வந்தனர்.
இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 7 .11 .2023ம் தேதி பாலக்கோடு அருகே உள்ள சிவன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினர். இதில் கர்ப்பமான மாணவிக்கு கடந்த 11ம் தேதி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து மருத்துவர் ஊர் நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்.
இது குறித்து ஊர் நல அலுவலர் பாலக்கோடு மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக