இந்த நிகழ்வில் பிடமனேரியில் உள்ள ரோட்டரி விவேகானந்தா செவித்திறன் குறையுடையோருக்கான உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் அமமுக மாவட்ட செயலாளர் டி .கே. ராஜேந்திரன், அவைத்தலைவர் முத்துசாமி, நகரச் செயலாளர் பார்த்திபன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கோகுல் ராஜ், பாஸ்கர் ஒன்றிய செயலாளர், ரமேஷ் குமார், ராகவன், சங்கீதா மற்றும் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து இலக்கியம்பட்டி பகுதி நிர்வாகிகள் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் டி.கே. ராஜேந்திரன் கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் சி. காளியப்பன், எஸ். பார்த்திபன் ஒன்றியம், பி. மணிகண்டன், சி .நாகப்பன் ,எம். மணி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக