தர்மபுரி மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளை ஒட்டி இலக்கியம்பட்டி பகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் இலக்கியம்பட்டி ஊராட்சி செயலாளர் காளியப்பன் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் அமமுக மாவட்ட செயலாளர் டிகே ராஜேந்திரன் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார், இதில் அக்கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக