அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 டிசம்பர், 2024

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.


தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலைஅரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் “அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா” மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 


இவ்விழாவில் 63 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.53.16 இலட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்கள். தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலைஅரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (21.12.2024) நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூ.48.01 இலட்சம் மதிப்பீட்டில் இணைப்புச்சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 10 பயனாளிகளுக்கு ரூ.2.00 இலட்சம் மதிப்பீட்டில் செயற்கைகால்களையும், 3 பயனாளிகளுக்கு ரூ.3.15 இலட்சம் மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கு சக்கர நாற்காலி என மொத்தம் 63 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.53.16 இலட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (21.12.2024) வழங்கினார்கள்


மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்

திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்ததாவது:

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாத்து அவர்களை சமுதாயத்துடன்

இணைந்து வாழ அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டிய அவசியம் குறித்து

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம்

3 ஆம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினமாக உலகம் முழுவதும்

அனுசரிக்கபட்டு வருகிறது. தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் இன்று நடைபெறும் இந்த விழாவில் கலந்து

கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கென

எண்ணற்ற திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக,

அரசு நகர பேருந்துகளில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இலவசமாக பயண

திட்டமும், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்திர

உதவித்தொகையான ரூ.1,500/-லிருந்து ரூ.2,000/- உயர்த்தி வழங்கும் திட்டமும்,


மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவித்தொகை ரொக்கமாக வழங்கி

திருமாங்கல்யம் செய்ய 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டமும், ஆவின் விற்பனை மையம்

அமைப்பதற்கு நிதியுதவி வழங்கும் திட்டமும், அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத

இடஒதுக்கீடு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவும் அவர்களின் வாழ்க்கை தரத்தினை

மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மாற்றுத்திறனாளிகளின் விருப்பதற்திற்கேற்ப நவீன உபகரணங்கள் வழங்குதல், கல்வி

மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளித்தல் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்

மூலம் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்திற்கே நல திட்ட உதவிகள் சென்றடைய

ஏதுவாக வருவாய் கோட்ட அளவில் மற்றும் வட்டார அளவில் ஒருங்கிணைந்த சேவை

மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் 27,800 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள

அட்டைகளும், ஆரம்ப நிலையில் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து சிறப்பு பயிற்சி

அளிப்பதற்கு ஏதுவாக ஆரம்ப நிலை பயிற்சி மையங்களை அமைத்து பயிற்சிகள்

அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி

பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2000/- முதல் ரூ.14,000/-

வரை கல்வி உதவித்தொகைகளும், 40 % மேல் மனவளர்ச்சி குன்றிய

மாற்றுத்திறனாளிகள், தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள்,

தொழுநோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், முதுகு தண்டுவடம்

பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 % மேல் கை, கால் கடுமையாக

பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மாதாந்திர பராமரிப்பு

உதவித்தொகை ரூ.2000/- வழங்கப்படுகிறது. இத்திட்டங்களின் மூலம் மாதந்தோறும்

6750 நபர்கள் பயனடைந்துவருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை

பெற்றுவரும் பயனாளிகளில் 90% மேல் கடுமையாக பாதிக்கப்பட்டு தன்னை தானே

பராமரித்துக்கொள்ள இயலாத மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவரை

நியமித்துக்கொள்ள ஏதுவாக மாதம் ரூ.1000/- கூடுதலாக நிதி உதவி வழங்கும் திட்டத்தின்

கீழ் 285 நபர்கள் பயனடைந்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதி

உதவி வழங்கும் திட்டம், சுயத்தொழில் புரிய ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் மான்யத்துடன் கூடிய வங்கி கடனுதவி

வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2023-24 ஆம் ஆண்டில் 238 நபர்களுக்கு

ரூ.2,22,00,000/-வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கும் திட்டம், இணைப்பு

சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம், செவித்திறன்

குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வைத்திறன் குறைபாடுடைய

மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலியுடன் கூடிய கைப்பேசி வழங்கும் திட்டம்,


மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் தாய்மார்கள் ஆகியோருக்கு மோட்டார் பொருத்திய

இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று

சக்கரவண்டி, இரு சக்கரநாற்காலி, ஊன்றுகோல்கள், C.P. chair, காதொலி கருவி,

பார்வையற்றோருக்கு கருப்பு கண்ணாடி மற்றும் மடக்குகுச்சி, பிரெய்லிவாட்ச் போன்ற

உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம், பார்வையற்றோருக்கு மாவட்டம் முழுவதும்

இலவசமாக பயணம் செய்யவும், இதர மாற்றுத்திறனாளிகள் பணிக்கு செல்லவும் மற்றும்

கல்வி பயில்வதற்காகவும் இலவசமாக 100 கி.மீ வரை பயணம் செய்யவும் பஸ் பாஸ்

வழங்கும் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரியும் தொண்டு நிறுவனங்களுக்கு

உணவூட்டு மான்யம், ஊதிய மான்யம், கட்டிட மான்யம் வழங்கும் திட்டங்களும்

செயல்படுத்தப்படுகிறது.

இவ்விழாவில் 63 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 53 இலட்சத்து 15 ஆயிரம்

மதிப்பில் அரசு நலதிட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில்

அனைத்து அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும்

நலத்திட்டங்கள் சென்றடைய அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து சிறப்பு

மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள்

அனைவரும் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் அரசு நலதிட்டங்களை பயன்படுத்தி

தங்கள் வாழ்கை தரத்தையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்

திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி, மாவட்ட காவல்

கண்காணிப்பாளர் திரு.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஆர்.கவிதா,

முன்னாள் அமைச்சர் முனைவர்.பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

திரு.தடங்கம்.பெ.சுப்பிரமணி, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி,

தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி.லட்சமி நாட்டான் மாது, கைம்பெண் நல வாரிய

உறுப்பினர் திருமதி.ரேணுகாதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்

திருமதி.பொ.செண்பகவள்ளி, கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சியாளர் திரு.ம.முனியப்பன்

உட்பட அரசுத்துறை அலுவலர்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும்

மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad