தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கூத்தப்பாடி பஞ்சாயத்து. கூத்தப்பாடி கிராமம் அருகே பழமை வாய்ந்த துரோபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்திலேயே பஞ்சபாண்டவர்களுக்கென சிலைகள் உள்ள கோயில் இந்த கோயில் தான்.
நேற்று இரவு 12 மணி அளவில் துரோபதி அம்மன் கோயில் பூட்டை உடைத்து அதில் உள்ள பெரிய உண்டியலை கடப்பாரை கொண்டு தகர்த்து அதை வெளியே 100 மீட்டர் இடைவெளியில் கொண்டு வந்து வைத்து உடைக்க முயற்சி செய்தனர். அப்பொழுது அவ்வழியாக ஒகேனக்கல் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
உண்டியலை கடப்பாரை கொண்டு உடைக்கின்ற சத்தம் கேட்டு காவல்துறையினர் அந்த இடத்திற்கு சென்ற பொழுது காவல் துறை வருகையைக் கண்டு அந்த அடையாளம் தெரியாத நபர்கள் உண்டியலை விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர். தகவல் அறிந்த கூத்தப்பாடி ஊர் பொதுமக்கள் அங்கு சென்று திருடர்களை தேடிப் பார்த்தபொழுது கிடைக்கவில்லை. ஒகேனக்கல் காவல்துறையும் விசாரணை செய்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக