பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 23 டிசம்பர், 2024

பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு  சத்துணவு ஊழியர்  சங்கத்தின்  சார்பில்தமிழ்நாடு சத்துணவு ஊழியர்  சங்க வட்ட கிளை தலைவர் மகேஸ்வரி  தலைமையில்   ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.


ஆர்ப்பாட்டத்திற்க்கு வட்ட கிளை செயலாளர் பூங்கொடி,  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை சங்க மாவட்ட துணைத் தலைவர் சதிஷ், வட்ட செயலாளர் மாணிக்கம், வட்ட பொருளாளர் ராமி கிருஷ்ணன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில்   சத்துணவு ஊழியர்களை தொகுப்பூதிய முறையில் பணி நியமனம் செய்வதை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும், சத்துணவு  ஊழியர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும், சத்துணவு ஊழியர்களின்  பணியை நிரந்தமாக்கு, மறுக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்கிடு, பழைய ஒய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்திடு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதில் தமிழ்நாடு  சத்துணவு ஊழியர் சங்கத்தினர்,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி சங்கத்தினர் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad