நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த் தலைமை வகித்தார், குழுமத்தின் செயலாளர் காயத்ரி கோவிந்த் வாழ்த்துரை வழங்கினார். ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பரஞ்சோதி முன்னிலை வகித்தார். நிகழ்விற்கு வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் அ.இம்தியாஸ் வரவேற்று பேசினார்.
நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தருமபுரி மாவட்ட திட்ட மேலாளர் கெளதம் சண்முகம், நிகழ்வில் கலந்து கொண்டு தமிழக அரசு மற்றும் மத்திய அரசு வழங்கக்கூடிய திட்டங்கள் குறித்தும், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்கள் குறித்தும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்கள் ஆகியவற்றை குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிழ்வை ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் அ.இம்தியாஸ் ஒருங்கிணைத்தார். நிறைவாக கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் நா.நாகராஜ் நன்றி கூறினார். நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக