அரூரில் போதைப்பொருள் மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக அரூர் டிவிஸ்டர்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் நீதிசேனை அறக்கட்டளை இணைந்து மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம் அரூரில் போதைப்பொருள் மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக அரூர் டிவிஸ்டர்ஸ்கிரிக்கெட் கிளப் நீதிசேனை அறக்கட்டளை இணைந்து மாநில அளவிலான மாபெரும் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டி கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்களாக நடைபெற்றது.
இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சார்ந்த 32 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியான இன்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசாக ஐம்பதாயிரம் அரூர் கேபிஏ குரூப்ஸ் அணியினருக்கும், இரண்டாம் பரிசாக நாற்பதாயிரம் எச்டிசிசி அணியினருக்கும், மூன்றாம் பரிசாக இருபத்தைந்தாயிரம் அரூர் பழையபேட்டை பிசிசி அணியினருக்கும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அரூர் டிவிஸ்டர்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் நீதிசேனை அறக்கட்டளை சட்டம் மற்றும் சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் நிர்வாகிகள் வழக்கறிஞர் ஆ.அஜித்குமார் ஆசிரியர் மு.ரமேஷ் திரைப்பட இயக்குனர் எஸ்.ஜி.சிவகுமார்
சமூகஆர்வலர் ஆர்.குமரேசன் ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக