மாரண்ட அள்ளி பேருந்து நிலையத்தில் நகர ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 28 டிசம்பர், 2024

மாரண்ட அள்ளி பேருந்து நிலையத்தில் நகர ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா.


தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி, பேருந்து நிலையத்தில் நகர ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா பேரூராட்சி கவுன்சிலர் எம்.ஆர்.கார்த்திகேயன் தலைமையில்  நடைபெற்றது, இவ்விழாவில் 30 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் ஆட்டோக்களுக்கு மாலைகள் அணிவித்து, சாம்பல் பூசணிக்காய்களை உடைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.


விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கவுன்சிலர் கார்த்திகேயன் இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் சாதிக் பாஷா, செயலாளர் பஷீர், பொருளாளர் காந்தி, துனைதலைவர் ரவி, துணைசெயலாளர் பாரூக்பாஷா, மற்றும்  செல்லப்பன், சுரேஷ், ஆனந்தன், மாதையன்,குபேந்திரன், உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad