தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் தமிழ் சங்கம் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா தமிழ் சங்கம் அரங்கத்தில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார், செயலாளர் கௌரி லிங்கம் முன்னிலை வகித்தார், சங்கத்தின் பொருளாளர் லெனின் வரவேற்றார். சங்கத்தின் கௌரவ தலைவர் இளந்தென்றல் சரவணன் அறிமுக உரையாற்றினார். கல்வியாளர் சேலம் அசோகன் பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக பட்டிமன்ற பேச்சாளர் தகடூர் ப.அறிவொளி கலந்துகொண்டு பாரதியார் குறித்தும் அவரின் விடுதலை வேட்கை பாடல்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார். இறுதியில் தமிழ்ச்சங்க துணை செயலாளர் பெருமாள் நன்றி உரை கூறினார். இந்நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் தமிழ் பற்றாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக