அரூர் அருகே உள்ள கீழ் மொரப்பூர் ஊராட்சி கணபதிபட்டியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.97 லட்சம் மதிப்பில் புதியதாக நியாய விலை கடை அமைக்கும் பணிக்கு ஒன்றிய குழு தலைவர் பொன்மலர்பசுபதி ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி முன்னிலையில் எம்எல்ஏ வே.சம்பத்குமார் கலந்து கொண்டு புதிய பணிக்கு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுகவின் ஊராட்சி பொறுப்பாளர் சென்னகேசவன் இராமமூர்த்தி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோபால் ஒன்றிய குழு உறுப்பினர் சுகந்திசுகுமாரன் கோபிநாத் நேதாஜ் சிங்காரவேல் பச்சதுரை வெங்கடேசன் மாரப்பன் குமரேசன் பச்சியப்பன் சேகர் காளியப்பன் செந்தில் ரங்கநாதன் பொன்னன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக