அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 டிசம்பர், 2024

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.


அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தருமபுரி அரசு மருத்துவமனையின் இரத்த வங்கியோடு இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை கல்லூரியின் முதல்வர் முனைவர் மங்கையர்க்கரசி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் அழகரசன் தொடங்கி வைத்தனர். 


இரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் கன்யா மாணவர்களுக்கு வழிகாட்டுதல் அறிவுரை வழங்கினார். இம் முகாமில் ஏராளமான பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் அளித்தனர். இம்முகாமை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் கோபிநாத் ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad