தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அரசு மருத்துவமனையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக நெசாவாளர் அணி சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது, இந்த முகாம் திமுக நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜபாட்ரங்கதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் 70க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
இம்முகாமினை தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தொடங்கி வைத்து இரத்த தானம் செய்தவர்களுக்கு பழரசம், பிஸ்கெட் மற்றும் உணவுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர் அரியப்பன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் சூடப்பட்டி சுப்ரமணி, மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட துணை செயலாளர் ராஜகுமாரி, ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், வக்கில் கோபால், மாரண்டஅள்ளி பேருராட்சி தலைவர் வெங்கடேசன், மாவட்ட மீனவர் அணி துணை செயலாளர் குமரன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜா, நிர்வாகிகள் பழனிசாமி, குமரன், ராமசாமி, குமார், வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சிவகுரு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளவரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக