தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கடமடை கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்ரமணி, இவரது மனைவி லட்சுமி இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் ஸ்ரீராம் (வயது. 12) தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். சுப்ரமணி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தனது விவசாய நிலத்தில் குடும்பத்தினருடன் நெல் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றின் அருகில் விளையாடி கொண்டிருந்த ஸ்ரீராம் கால் தவறி கிணற்றின் உள்ளே விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார், இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை மீட்பதற்க்குள் 80 அடி ஆழ கிணற்றுக்குள் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான்.
தகவலறிந்த பாலக்கோடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்க்கு வந்த கிணற்றில் இருந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக