அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியமதிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து பெண்ணாகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர்ஆ ஜீவானந்தம் தலைமை வகித்தார்.
மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தர்மபுரி மாவட்ட செயலாளர் இரா சிசுபாலன், மாநில குழு உறுப்பினர் அ. குமார்மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. மாதன் ஆகியவர்கள் கண்டன உரையாற்றினர்.அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. சக்திவேல்,மாவட்ட குழு உறுப்பினர் வி.ரவி, கே. அன்பு, எம்.வளர்மதி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக