தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா நிகழ்வு வரும் டிசம்பர் 28, 2024 அன்று விருதுநகரில் நடைபெற்றது, இந்த நிகழ்வு தருமபுரியில் ஔவையார் மகளிர் பள்ளியில் நடைபெற்றது, இந்த வினா வினாப் போட்டியில் வெற்றி பெற்ற தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த திரு.ப.அறிவொளி, திருமதி.கு.வாசுகி, திருமதி.இரா.வனசுந்தரி ஆகிய 3 நபர்களுக்கு ரூ4,50,000/ மதிப்பீட்டில் வழங்கிய பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆப., அவர்களிடம் காண்பித்து வழ்த்து பெற்றார்கள்.
இந்நிகழ்ச்சியில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆஃ.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி.லட்சமி நாட்டான் மாது, முன்னோடி வங்கி மேலாளர் திரு.ராமஜெயம், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.ச.பவித்ரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஐ.ஜோதி சந்திரா, பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பாக்கியமணி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், வங்கியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மற்றும் மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக