அரசு துவக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, தடங்கம் சுப்பிரமணி துவக்கிவைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 டிசம்பர், 2024

அரசு துவக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, தடங்கம் சுப்பிரமணி துவக்கிவைத்தார்.


தர்மபுரி கிழக்கு மாவட்டம் நல்லம்பள்ளி மத்திய ஒன்றியம் ஏலகிரி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு ரூபாய் 4 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்து வைத்தார் தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி.


தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மாணவ செல்வங்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது, இந்த நிகழ்வில் திமுக நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய  செயலாளர் கே பி மல்லமுத்து, பொதுக்குழு உறுப்பினர் நடராஜ், மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் பெரியண்ணன், சுற்றுச்சூழல் அணி இளங்கவி, சார்பானிகளின் நிர்வாகிகள் கிருஷ்ணன், ராஜா தங்கம், உதயகுமார் கிளை நிர்வாகிகள் கண்ணாயிரம், மணி முனுசாமி, வேல்முருகன், ஆறுமுகம் கிருஷ்ணப்பன் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

Post Top Ad