திமுக தொழில்நுட்ப அணி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 17 டிசம்பர், 2024

திமுக தொழில்நுட்ப அணி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில் நுட்ப அணி (ஜ.டி.விங்க்) ஆலோசனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கௌதம் தலைமையில் நடைபெற்றது. 


இதில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஈஸ்வர், ராஜேஷ், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ரகு, முனியப்பன், கவின் குமார், காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் உதயசூரியன் வரவேற்புரையாற்றினார். கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணியம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கிப் பேசினார். வரும் 23-ஆம் தேதி தமிழக தொழில் துறை அமைச்சரும், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் TRB. ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் சேலத்தில் நடைபெறும் மண்டல அளவில் கூட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 


இதில் பென்னாகரம் தொகுதி பார்வையாளரும் மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளருமான பாரி, பென்னாகரம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், தருமபுரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் ஒன்றிய, நகர, பேரூர் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் யாஸ்மின் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad