இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பாப்பிரெட்டிப்பட்டி வட்ட குழு சார்பில் கடத்தூரில் அண்ணல் அம்பேத்கரை அவதூறாக பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, மன்னிப்பு கேட்க, பதவி விலக வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 20.12.2024 காலை 11 மணியளவில் வட்டச் செயலாளர் குப்பன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்டத் தலைவர் குமரேசன், வட்டத் துணை தலைவர் முனியப்பன், துணை செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டத் தலைவர் குறளரசன் மாவட்டச் செயலாளர் அருள்குமார் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். வட்ட பொருளாளர் ராகப்பிரியா நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக