தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் 2 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் பாலக்கோடு அடுத்த தாளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த முதியவர் கிருஷ்ணன் (வயது .67) இவர் விவசாயம் செய்து கொண்டு கால்நடைகளை வளர்த்து வருகிறார். இன்று காலை சுமார் 10 மணிக்கு கறவை மாடுகளுக்கு தண்ணீர் வைக்க விவசாய கிணற்றின் மின் மோட்டாரை இயக்குவதற்காக மோட்டார் அறையில் உள்ள சுவிட்சை ஆன் செய்ய சென்றுள்ளார், ஏற்கனவே மழையில் நனைந்து சுவிட்ச் பாக்ஸ் ஈரமாக இருந்துள்ளது, இதனை அறியாத முதியவர் சுவிட்ச் போட முயன்ற போது இவரது உடலில் மின்சாரம் பாய்ந்து பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த பாலக்கோடு போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கால்நடைகளுக்கு தண்ணீர் வைக்க சென்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக