பேரணியின் போது, தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணியை துவங்க வேண்டும், காவிரி உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், ஒகேனக்கல் குடிநீர் இரண்டாம் கட்ட பணிகளை துவக்க வேண்டும், தருமபுரி - மொரப்பூர் ரயில்வே திட்ட பணிகளை துவக்க வேண்டும், அனைத்து வட்டங்களிலும் வேளாண்மை சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும், அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என முழுக்கமிட்டு சென்றனர்.
அதனை தொடர்ந்து பாலக்கோடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராசன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார். மத்தியக்குழு உறுப்பினர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் சிந்தன், மாவட்ட செயலாளர் குமார், மாநிலக்குழு உறுப்பினர் சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, முத்து, மாதன், அருச்சுணன், விசுவநாதன், கிரைஸாமேரி, ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
இதனை தொடர்ந்து பாலக்கோடு தனியார் மண்டபத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி முடிவில் வட்ட செயலாளர் காரல்மார்க்ஸ் நன்றி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக