தருமபுரி சிப்காட் தொழிற் பூங்காவில் உள்கட்டமைப்புகான சாலை, வடிகால் மற்றும் மின் விளக்கு வசதி செய்து கொடுப்பதற்காக விரிவான திட்ட மதிப்பீடு குறித்து சிப்காட் மேலாண்மை இயக்குநர் மரு. கி.செந்தில் ராஜ் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (23.12.2024) களஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தருமபுரி தொழிற் பூங்கா, தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், அதகப்பாடி கிராமம் மற்றும் நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை, தடங்கம் (ம) பாலஜங்கமனஹள்ளி கிராமங்களில் 1733.03 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த சிப்காட் தொழிற் பூங்காவிற்காக சேலம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை எண் 44- லிருந்து 1.35 கி.மீ நீள நான்கு வழி அணுகு சாலை அமைக்கும் பணி ரூபாய் 14.08 கோடி திட்ட மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது.
சிப்காட் நிறுவனம் மூலம் சுற்றுச்சூழல் அனுமதிக்காக சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் ( MOEF & CC ) புதுடெல்லியிடம் 04.11.2024 அன்று இறுதி சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளது. தருமபுரி சிப்காட் தொழிற் பூங்காவில் உள்கட்டமைப்புகான சாலை, வடிகால் மற்றும் மின்விளக்கு வசதி செய்து கொடுப்பதற்காக விரிவான திட்ட மதிப்பீடு குறித்து சிப்காட் மேலாண்மை இயக்குநர் அவர்களால் இன்று கள ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது விரைவில் சிப்காட் தொழிற் பூங்காவானது செயல்பாட்டிற்கு வந்து தொழில்முனைவோர்களின் தேவையை பூர்த்தி செய்யும் என்றும், தொழில் முனைவோர்கள் SIPCOT - இணையத்தில் உள்ள EOI (Expression Of Interest) தற்போது வெளியிடப்பட்டுள்ளதால் விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் தங்களின் தொழில் குறித்த முன் தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம் என சிப்காட் மேலாண்மை இயக்குநர் மரு. கி.செந்தில் ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) திருமதி.பூங்கோதை, சிப்காட் செயற் பொறியாளர் திரு.பசுபதி, தருமபுரி சிப்காட் திட்ட அலுவலர் திரு.இராஜ்குமார் மற்றும் அரசு துணை அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக