இந்நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றிய பொருளாளர் துரை முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் 300க்கும் மேற்பட்டோருக்கு வேட்டி - சேலை மற்றும் சில்வர் பாத்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் திமுகவின் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் முருகன், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகர், வழக்கறிஞர் முருகன், மாரண்டஅள்ளி பேரூராட்சித் தலைவர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் உமாதுரை, மாவட்ட விவசாய அணி ஏவி குமார், சாமனூர் மணிவண்ணன், தர்மன், சிவக்குமார், அவைத்தலைவர் முருகன் துணைச் செயலாளர் சரிதா குமார், புதூர் பழனிச்சாமி, கவுன்சிலர் கார்த்திகேயன், சிவக்குமார் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக