தருமபுரியில் புதுமைப்‌ பெண்‌ திட்டத்தின்‌ விரிவாக்கம் இன்று தொடக்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 30 டிசம்பர், 2024

தருமபுரியில் புதுமைப்‌ பெண்‌ திட்டத்தின்‌ விரிவாக்கம் இன்று தொடக்கம்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தூத்துக்குடி மாவட்டம்‌, காமராஜ்‌ கல்லூரியில்‌ சமூகநலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறையின்‌ சார்பில்‌ மூவலூர்‌ இராமாமிர்தம்‌ அம்மையார்‌ நினைவு உயர்கல்வி உறுதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌, அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை தமிழ்வழியில்‌ பயின்று உயர்கல்வியில்‌ சேரும்‌ மாணவிகளுக்கும்‌ இனி மாதந்தோறும்‌ ரூ.1,000 வழங்கும்‌ புதுமைப்‌ பெண்‌ திட்டத்தின்‌ விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைத்து, வங்கி பற்று அட்டைகள்‌ வழங்கினார்கள்‌.


அதனைத்தொடர்ந்து, தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலைஅரங்கத்தில்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை தமிழ்வழியில்‌ பயின்று. உயர்கல்வியில்‌ சேரும்‌ மாணவிகளுக்கு மாதந்தோறும்‌ ரூ.1000 வழங்கும்‌ புதுமைப்பெண்‌ திட்டத்தின்‌ விரிவாக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி, அவர்கள்‌ இன்று தொடங்கி வைத்து, 136 மாணவிகளுக்கு பற்று அட்டைகளை வழங்கினார்கள்‌.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தூத்துக்குடி மாவட்டம்‌, காமராஜ்‌ கல்லூரியில்‌ சமூகநலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறையின்‌ சார்பில்‌ மூவலூர்‌ இராமாமிர்தம்‌ அம்மையார்‌ நினைவு உயர்கல்வி உறுதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌, அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை தமிழ்வழியில்‌ பயின்று உயர்கல்வியில்‌ சேரும்‌ மாணவிகளுக்கும்‌ இனி மாதந்தோறும்‌ ரூ.1,000 வழங்கும்‌ புதுமைப்‌ பெண்‌ திட்டத்தின்‌ விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைத்து, வங்கி பற்று அட்டைகள்‌ வழங்கினார்கள்‌. 


அதனைத்தொடர்ந்து, தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலைஅரங்கத்தில்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை தமிழ்வழியில்‌ பயின்று உயர்கல்வியில்‌ சேரும்‌ மாணவிகளுக்கு மாதந்தோறும்‌ ரூ.1000 வழங்கும்‌ புதுமைப்பெண்‌ திட்டத்தின்‌ விரிவாக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி, Su. அவர்கள்‌ இன்று (30.12.2024) தொடங்கி வைத்து, 135 மாணவிகளுக்கு பற்று அட்டைகளை வழங்கினார்கள்‌.


இந்நிகழ்ச்சியில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி, ௫.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்ததாவது:- மூவலூர்‌ இராமாமிர்தம்‌ அம்மையார்‌ நினைவு திருமண நிதியுதவித்‌ திட்டம்‌ மூவலூர்‌ இராமாமிர்தம்‌ அம்மையார்‌ நினைவு உயர்கல்வி உறுதித்திட்டமாக (புதுமைப்‌ பெண்‌ திட்டம்‌) மாற்றம்‌ செய்யப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தமிழகத்தில்‌ உள்ள ஏழை எளிய குடும்பங்களை சார்ந்த மாணவிகள்‌, பொருளாதார சிக்கல்களின்‌ காரணமாக 12-ம்‌ வகுப்பு முடித்த உடன்‌ உயர்‌ கல்வி தொடர முடியாமல்‌ போகிறது. எனவே இந்த மாணவிகளின்‌ கல்வி தடைப்படாமல்‌ அவர்களின்‌ உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும்‌ பொருட்டு சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறை மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ மூவலூர்‌ இராமாமிர்தம்‌ அம்மையார்‌ உயர்கல்வி உறுதி திட்டத்தின்‌ கீழ்‌ 6ஆம்‌ வகுப்பு முதல்‌ 12 -ம்‌ வகுப்பு வரை அரசுப்பள்ளியில்‌ படித்து மேற்படிப்பில்‌ சேரும்‌ அனைத்து மாணவிகளுக்கும்‌ மாதம்‌ ரூ.4000/ வழங்கும்‌ புதுமைப்பெண்‌ திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.


இதன்‌ முக்கிய நோக்கம்‌ அரசு பள்ளிகளில்‌ மாணவிகள்‌ சேர்க்கையை அதிகப்படுத்தவும்‌ உயர்கல்வி பயிலும்‌ மாணவிகளின்‌ சதவிதத்தை உயர்த்தவும்‌, இளம்வயது திருமணத்தை தடுத்தலும்‌ ஆகும்‌. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ புதுமைப்‌ பெண்‌ திட்டம்‌. 05.09.2022 அன்றும்‌ தமிழ்ப்‌ புதல்வன்‌ திட்டம்‌ 09.08.2024 அன்றும்‌ தமிழ்நாடு முழுவதும்‌ தொடங்கி வைக்கப்பட்டது.


இத்திட்டத்தின்‌ மூலம்‌ 92 கல்ஜூரிகளில்‌ பயிலும்‌ மாணவ மாணவிகளுக்கு புதுமைப்‌ பெண்‌ திட்டம்‌ மற்றும்‌ தமிழ்ப்‌ புதல்வன்‌ திட்டத்தின்‌ கீழ்‌ மொத்தம்‌ 24736 மாணவ மாணவிகள்‌ பயன்பெற்று வருகின்றனர்‌. 2024 டிசம்பர்‌ மாதம்‌ புதுமைப்‌ பெண்‌ திட்டத்தின்கீழ்‌ 13,864 மாணவிகளும்‌ 2024 டிசம்பர்‌ மாதம்‌ தமிழ்ப்‌ புதல்வன்‌ திட்டத்தின்கீழ்‌ 10,872 மாணவர்களும்‌ பயன்பெற்றுள்ளனர்‌.


தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணையில்‌ 2024-2025ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ தமிழ்நாட்டில்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 6 ஆம்‌ வகுப்பு முதல்‌ 12 ஆம்வகுப்பு வரை தமிழ்‌ வழிக்‌ கல்வியில்‌ பயின்று மேற்படிப்பில்‌ சேரும்‌ அனைத்து மாணவிகளுக்கும்‌ இத்திட்டம்‌ விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை தமிழ்வழியில்‌ பயின்று உயர்கல்வியில்‌ சேரும்‌ மாணவிகளுக்கு மாதந்தோறும்‌ ரூ.4000 வழங்கும்‌ புதுமைப்‌பெண்‌ திட்டத்தின்‌ விரிவாக்கத்தை இன்று (30.12.2024) தொடங்கி வைத்தார்கள்‌.


தருமபுரி மாவட்டத்தில்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு
வரை தமிழ்வழியில்‌ பயின்று உயர்கல்வியில்‌ சேரும்‌ 36 கல்லூரிகளில்‌ பயிலும்‌ 135 மாணவிகளுக்கு புதுமைப்பெண்‌ திட்ட விரிவாக்கத்தின்‌ கீழ்‌, மாதந்தோறும்‌ ரூ.1000 வழங்கப்படும்‌. எனவே, மாணவிகள்‌ புதுமைப்‌ பெண்‌ திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்படும்‌. மாதாந்திர உதவித்தொகையை பெற்று தங்களது மேற்படிப்பை முடித்து விருப்பமான பணியில்‌ சேர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும்‌. புதுமை பெண்‌ விரிவாக்க திட்ட மாணவிகள்‌ அனைவருக்கும்‌ Welcome Kit — ஆக தமிழ்ப்‌ பெருமிதம்‌ மற்றும்‌ உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிக்காட்டி ஆகிய இரண்டு புத்தகங்களும்‌ வழங்கப்படும்‌. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப. அவர்கள்‌ தெரிவித்தார்கள்‌.


இந்நிகழ்ச்சியில்‌, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்‌ திரு.ஆஃ.மணி, தருமபுரி
சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. எஸ்‌.பி.வெங்கடேஸ்வரன்‌, முன்னாள்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. தடங்கம்‌ பெ.சுப்பிரமணி, தருமபுரி நகர்மன்ற தலைவர்‌ திருமதி.லட்சமி நாட்டான்‌ மாது, முன்னோடி வங்கி மேலாளர்‌ திரு.ராமஜெயம்‌, மாவட்ட சமூக நல அலுவலர்‌ திருமதி.ச.பவித்ரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்‌ திருமதி.ஐ.ஜோதி சந்திரா, பென்னாகரம்‌ அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி முதல்வர்‌ முனைவர்‌ பாக்கியமணி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள்‌, வங்கியாளர்கள்‌, கல்லூரி பேராசிரியர்கள்‌, மற்றும்‌ மாணவியர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

கருத்துகள் இல்லை:

Post Top Ad