பாலக்கோட்டில் கரும்பு நடவு செய்யப்பட்டு14 மாதங்கள் கடந்த நிலையில் கரும்பு பூ எடுத்ததால் மகசூல் பாதிப்பு விவசாயிகள் கவலை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 டிசம்பர், 2024

பாலக்கோட்டில் கரும்பு நடவு செய்யப்பட்டு14 மாதங்கள் கடந்த நிலையில் கரும்பு பூ எடுத்ததால் மகசூல் பாதிப்பு விவசாயிகள் கவலை.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகின்றது தமிழ்நாட்டில் இயங்கும் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையும் ஒன்றாகும்.


இந்த ஆலையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் கரும்பு அரவைப் பணி நடக்கும். இந்தக் கரும்பாலைக்குப் பாலக்கோடு சுற்றியுள்ள மல்லாபுரம், பெல்ராம்பட்டி, வெள்ளிச்சந்தை, கோடியூர், வெலாம்பட்டி, திம்மம்பட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்ட அள்ளி, சாமனூர், காரிமங்கலம் பெரியாம்பட்டி, தும்பலஅள்ளி போன்ற பகுதிகளில் உள்ள கரும்பு விவசாயிகள் தாங்கள் விளைந்த கரும்பைப் பதிவு செய்து ஆலைக்குக் அனுப்பி வருகின்றனர். நான்கு லட்சம் மெட்ரிக் டன் வரை சர்க்கரையை உற்பத்தி செய்து தேசிய அளவில் நற்சான்று பெற்ற பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை என்பது குறிப்பிடத்தக்கது. 


சில வருடங்களாகவே இப்பகுதியில் தொடர்ந்து பருவமழை குறைந்து போன நிலையில் சில விவசாயிகள் ஆழ்துளை கிணறுகள் அமைத்து சொட்டுநீர் பாசனம் மூலம் குறைந்த அளவே கரும்பு பயிர் விவசாயம் செய்து வருகின்றனர். நடப்பாண்டில் சுமார் 50 ஆயிரம் டன் அளவிற்கு கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது கரும்பு நடவு செய்யப்பட்டு14 மாதங்கள் கடந்த நிலையில் கரும்பு பூ எடுத்ததால் மகசூல் பாதிப்பு மற்றும் கரும்புச்சாறு குறைந்து நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது. 


எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை  மேற்கொண்டு  சர்க்கரை ஆலையை உடனடியாக திறக்க வேண்டுமென வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad