கிட்டம்பட்டி கிராமத்தில் அனுமதி இன்றி பட்டாசு விற்றவர் கைது - பட்டாசுக்கள் பறிமுதல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 டிசம்பர், 2024

கிட்டம்பட்டி கிராமத்தில் அனுமதி இன்றி பட்டாசு விற்றவர் கைது - பட்டாசுக்கள் பறிமுதல்.


தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த கிட்டம்பட்டி கிராமத்தில் உள்ள மளிகை கடையில் அனுமதி இன்றி பட்டாசுக்கள் விற்பனை செய்வதாக மகேந்திர மங்கலம் போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் கிடைத்தது, இதனையடுத்து போலீசார்  அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.


அப்போது உதயகுமார் (வயது. 29) என்பவரின் மளிகை கடையில் உரிய அனுமதி இன்றி எளிதில் தீ பற்றி அதிக சத்தத்துடன் வெடிக்க கூடிய பட்டாசு மற்றும் சரவெடிகள் இருப்பதைக் கண்ட போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உதயகுமாரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad