குமாரசாமிபேட்டை அருகே 500க்கும் மேற்பட்ட வீடுகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 2 டிசம்பர், 2024

குமாரசாமிபேட்டை அருகே 500க்கும் மேற்பட்ட வீடுகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது.


தருமபுரி குமாரசாமிபேட்டை மேம்பாலம் அருகில் பெஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து பெய்த மழையால் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மழை நீரால் சூழப்பட்டது.


தர்மபுரியில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பொழிந்தது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தர்மபுரி குடியிருப்பு பகுதியில் குமாரசாமி பேட்டை, ஏஸ்டிசி நகர், டிஎன்வி நகர், அண்ணா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழந்துள்ளது.


இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் அப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

Post Top Ad