பாலக்கோடு ஊரக வளர்ச்சி வட்டார வள மைய வளாகத்தில் அங்கன்வாடி மைய உதவியாளர்களுக்கான உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 டிசம்பர், 2024

பாலக்கோடு ஊரக வளர்ச்சி வட்டார வள மைய வளாகத்தில் அங்கன்வாடி மைய உதவியாளர்களுக்கான உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு,  ஊரக  வளர்ச்சி வட்டார வள மைய வளாகத்தில், பாலக்கோடு  உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா, அவர்கள்  வழிகாட்டடுதலின் படி,  மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஆலோசனையின் படி ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பணியாற்றும் அங்கன்வாடி மைய உதவியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த அடிப்படை பயிற்சி வகுப்பு  ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையில்  நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா, பாலக்கோடு குழந்தைகள் வளர்ச்சி திட்ட  மேற்பார்வையாளர்கள் கலா,  இந்திரா காந்தி மற்றும் கண்காணிப்பாளர் மனோன்மணி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி வரவேற்று பேசினார்.


இந்த பயிற்சி வகுப்பில்  பயிற்றுனர் காமேஷ் பங்கேற்று அங்கன்வாடி மைய உதவியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் உணவு மேலாண்மை குறித்து  பயிற்சி அளித்தார். பயிற்சியில் அங்கன்வாடி மைய உதவியாளர்கள் தாங்கள் பணி புரியும் மையங்களில் பின்பற்ற வேண்டிய தன்சுத்தம், சுற்றுப்புற சுத்தம், பொருள் மேலாண்மை, பொருட்கள் இருப்பு வைத்தல், உணவு தயார் செய்தல், கையாளுதல், பரிமாறுதல், மேலும் பூச்சிகள் கட்டுபாடு,  பொருட்கள் கெடுவதற்கான சூழ்நிலைகள் இயற்பியல், வேதியியல்,  உயிரியல் காரணிகள் தவிர்த்தல் தடுத்தல் , தயாரித்த உணவு பொருள் வைத்திருக்க வேண்டிய , பரிமாற வேண்டிய வெப்பநிலை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.


இப்பயிற்சி வகுப்பில் 80க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மைய உதவியாளர்களுடன் வட்டார வளமைய மேலாளர் சிவலிங்கம் மற்றும் வளமைய ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad