தர்மபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வடிவேல் கவுண்டர் நினைவாக தர்மபுரி நகர அரிமா சங்கம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் முற்றிலும் இலவச கண் சிகிச்சை முகாம் ரோட்டரி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கண்ணில் புரை. உண்டாகுதல் கண்ணில் சதை வளர்ச்சி .கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் அழுத்தம், மாலைக்கண், மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது இந்த முகாமில் டி என் வி சண்முகம், டி என் வி செல்வராஜ், டி என் வி மதிவாணன், டி என் வி வினோபாஜி, டி என் வி மருத்துவர் மணிமாறன், தர்மபுரி அரிமா சங்கம் தலைவர் அம்ஜத், செயலாளர் அல்லி முத்து, செயலாளர் சங்கர், பொருளாளர் லட்சுமிகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமில் காசநோய் இலவச பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை, இலவச எக்ஸ்ரே பரிசோதனை, எடை குறைவு, பசியின்மை மாலை நேரங்களில் விட்டு விட்டு இரண்டு வாரங்களாக மேல் தொடர் இருமல். காசநோய் அறிகுறி ஆகும் இவர்களுக்கு மருத்துவர் பாலசுப்பிரமணியம் பரிசோதனை செய்தனர், இந்த முகாமில் 400 பேர் கலந்து கொண்டனர்.
இதில் கண் அறுவை சிகிச்சைக்கு 270 பேர் தேர்வு செய்யப்பட்டனர், இவர்கள் அனைவரையும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக