தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே எட்டையாம்பட்டி கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்ற நிலையில் ஊத்தங்கரை அருகே நேற்று பேருந்து விபத்துக்குள்ளானது பலத்த காயங்களுடன் 40-கும் மேற்பட்டோர தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டவர்களை தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம்.பெ.சுப்ரமணி இன்று இரண்டாவது நாளாக நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறி மருத்துவர்களிடம் சிகிச்சைகளை குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் திமுகவின் தருமபுரி மேற்கு ஒன்றிய செயலாளர் காவேரி, முன்னாள் நகர செயலாளர் மே.அன்பழகன், நகர துணை செயலாளர் அன்பழகன், ஒன்றிய அவை தலைவர் செல்வராஜ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் காசிநாதன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கெளதம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக