தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பி.கொல்லப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் மூதாட்டி பெருமா (வயது.80) இவர் தனியாக வசித்து வருகிறார். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நேற்றிரவு இவரது வீடு இடிந்து விழுந்து தரைமட்டமானது, இதில் அதிர்ஷ்டவசமாக மூதாட்டி உயிர் தப்பினார், ஆனால் தட்டு முட்டு சாமான்கள், உணவு பொருட்கள், படுக்கை விரிப்புக்கள் என அனைத்து உடைமைகளும் முற்றிலும் சேதமடைந்தன.
இது குறித்து வருவாய் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த அதிகாரிகளும் வந்து பார்க்கவில்லை எனவும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரனம் வழங்க வேண்டும் என மூதாட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக