கூசுக்கல் கிராமத்தில் மாமானார் வீட்டை ஜே.சி.பி மூலம் இடித்து தரைமட்டமாக்கிய மருமகன் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 டிசம்பர், 2024

கூசுக்கல் கிராமத்தில் மாமானார் வீட்டை ஜே.சி.பி மூலம் இடித்து தரைமட்டமாக்கிய மருமகன் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கூசுக்கல் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் (வயது. 57) இவர் அரசு கலைக் கல்லூரியில் சமையலராக வேலை செய்து வருகிறார்.


இவரது மகள் லட்சுமி (வயது.37) என்பவரை கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் பாலக்கோடு அருகே தாதப்பன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த ஜே.சி.பி. டிரைவர் சக்திவேல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்கு 1 மகன் 1மகள் உள்ளனர்.


தற்போது லட்சுமி கோட்டூரில் உள்ள மாணவர் விடுதியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். சிவலிங்கம் தனது மகள் லட்சுமிக்கு 44 சென்ட் நிலம் வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் லட்சுமியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் சக்திவேல் மனைவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்,


இதனால் விரக்தியடைந்த லட்சுமி கூசுக்கல்லில் உள்ள  தனது தந்தை வீட்டிற்க்கு நேற்று முன்தினம் வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் இன்று விடியற்காலை 3 மணிக்கு அணைவரும் தூங்கி கொண்டிருக்கும் போது, ஜே.சி.பி மூலம் மாமனார் வீட்டை இடித்து தரைமட்டமாக்கினார்.


இதில் லேசான காயத்துடன் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரனை மேற்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad