கால்நடை வளர்ப்போருக்கான முக்கிய அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 டிசம்பர், 2024

கால்நடை வளர்ப்போருக்கான முக்கிய அறிவிப்பு.


தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 16.12.2024 முதல் 05.01.2025 முடிய மூன்று வார காலத்திற்கு சிறப்பு முகாம்கள் மூலமாக கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது. கால்நடை வளர்ப்போர் தங்களுடைய கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தருமபுரி மாவட்டத்தில் 3,46,600 பசு மற்றும் எருமை இனங்கள் உள்ளன. இவற்றில் 4 மாத வயதிற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 6-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணிமேற்கொள்ள மொத்தம் 3,56,000 டோஸ்கள் கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. 


தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 16.12.2024 முதல் 05.01.2025 முடிய மூன்று வார காலத்திற்கு சிறப்பு முகாம்கள் மூலமாக கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது. இம்முகாம்கள் மூலமாக மாவட்டத்திலுள்ள 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமை இனங்களுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது.


விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும்பணி 06.01.2025 முதல் 15.01.2025 முடிய மேற்கொள்ளப்படும். விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகம், கால்நடை கிளைநிலையம் மற்றும் கால்நடை மருத்துவமனையை அணுகவும். கால்நடை வளர்ப்போர் இவ்வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்தி 100 சதவீதம் தங்களுடைய கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களின் கைபேசி எண்கள் 9445001113, 9445032563, 9443077435, 8144874747–ஐ தொடர்புகொள்ளளாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad