சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய தாய்மார்கள் பாலூட்டும் அறையை வேறு இடத்துக்கு மாற்ற, பென்னாகரம் எம்.எல்.ஏ ஜிகே.மணி அதிகாரிகளிடம் அறிவுறுத்தல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 23 டிசம்பர், 2024

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய தாய்மார்கள் பாலூட்டும் அறையை வேறு இடத்துக்கு மாற்ற, பென்னாகரம் எம்.எல்.ஏ ஜிகே.மணி அதிகாரிகளிடம் அறிவுறுத்தல்.


தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு கடந்த, 21 அன்று நடந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் தாலுக்கா, பாப்பாரப்பட்டி பேரூராட்சியில், 2.74 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வார சந்தை வளாகத்தை திறந்து வைத்தார். அதனை, பென்னாகரம், பா.ம.க., – எம்.எல்.ஏ., ஜிகே.மணி நேற்று ஆய்வு செய்தார். 


அதில், சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கான அடிப்படை வசதிகள் குறித்து, பாப்பார்ப்பட்டி செயல் அலுவலர் கோமதியிடம் கேட்டறிந்தார். மேலும், சந்தை வளாகத்தின் அருகில் இலவச பொதுக்கழிவறை கட்டும் பணியை ஆய்வு செய்து, விரைந்து முடித்து பயன்பாட்டு கொண்டுவர அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சமூக விரோதியுடன் கூடாரமாக மாறிய தாய்மார்கள் பாலூட்டும் அறையை பார்வையிட்டார். அதை பெண்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததால். அதற்கு பதில் வேறொரு இடத்தில் பாலூட்டும் அறையை அமைக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.


அதனை தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்கு பல்வேறு திட்டங்கள்  வேண்டுமென சட்டசபையில் கோரிக்கை வைத்தேன். அதன் அடிப்படையில், புதிய வார சந்தைக்கு கட்டித் திறக்கப்பட்டுள்ளது. மேலும், கழிவறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு சுகாதாரத்தை காக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளோம். அதேபோல், பாப்பார்பட்டியில் நீண்ட காலமாக நிலவும் சாக்கடை கால்வாய் பிரச்சனைக்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் ஸ்டாண்டில் பைக்குகள் ஆக்கிரமித்துள்ளதால், அரசு பஸ்கள் நிற்க இடமில்லாத நிலை உள்ளது. எனவே, வாகனங்களை நிறுத்த தனியாக தனியாக ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 


இதில் தொகுதி அமைப்புச் செயலாளர் சுதாகர் கிருஷ்ணன், மாவட்டத் தலைவர் செல்வகுமார், பஞ்சாயத்து தலைவர்கள் கோவிந்தசாமி  பெரியசாமி, கவுன்சிலர் வெண்ணிலா ஆறுமுகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad