தருமபுரி மாவட்ட தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில் மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஜனவரி 22ஆம் தேதி மூன்றாம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி நடத்துவதற்கு தடங்கம் மண்டு மாரியம்மன் கோவில் வளாகத்தில் இன்று தாபா சிவா தலைமையில் கால்கோள் நடும் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு வாடிவாசல், பார்வையாளர் மாடம் உள்ளிட்ட தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பணிகள் தொடங்க உள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வதற்கு, இணைய வழியில் முன்பதிவு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ஜல்லிக்கட்டு பேரவையினர் தெரிவித்தனர். இதில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில் மூன்றாம் ஆண்டு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் தாபா சிவா தலைமையில் காலை யாகசாலை நடைபெற்ற தொடர்ந்து பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தடங்கம் ஊர் கவுண்டர் காளியப்பன், மந்திரி கவுண்டர் சாமிநாதன் நிர்வாகிகள் தலைவர்கள் கந்தசாமி, தங்கவேல், அண்ணாதுரை, முனிராஜ், காங்கிரஸ், வடிவேல், வேலு, சுப்பிரமணி, கோவிந்தராஜ், கோவிந்தசாமி, அங்கப்பன், ஹரி, கிருஷ்ணன், குமார், வீரமணி, முருகன், காந்தி மற்றும் ஊர் பொதுமக்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக