அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிப்பு; முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. அறிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 23 டிசம்பர், 2024

அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிப்பு; முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. அறிக்கை.


தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழக முன்னாள் முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவன தலைவருமான  எம்.ஜி.ஆரின் 37-ம் ஆண்டு நினைவு நாள் அ.தி.மு.க. சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் 24/12/2024 (செவ்வாய்க்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆரின் உருவ சிலை மற்றும் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்த வேண்டுகிறேன். இந்த நிகழ்ச்சியில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.


இதேபோன்று மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தர்மபுரியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் 24/12/2024 காலை 10-30 மணிக்கு எம்.ஜி.ஆர்.நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அங்குள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்திற்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில, மாவட்ட ,ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், கட்சி தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad