தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.12.2024) திறந்து வைத்தார்கள். இதுநாள் வரை தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் காலையும், இரவும் பால் மற்றும் ரொட்டி மட்டுமே வழங்கப்பட்டு வந்தது, தற்பொழுது பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மூன்று வேளையும் உணவு வழங்கப்படும்.
காலை நேரத்தில் இட்லி, சட்னி, சாம்பார் வழங்கப்படும். மதிய நேரத்தில் சாதம், சாம்பார், கீரை, பொரியல், முட்டை, வாழைப்பழம் வழங்கப்படும். இரவு நேரத்தில் கோதுமை ரவை கிச்சிடி வழங்கப்படும். இதற்காக சமையலறை புதுப்பிக்கப்பட்டு உபகரணங்கள் மற்றும் மளிகை சாமான்கள் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பெறப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கான அரிசி உணவு வழங்கல் துறையிலிருந்து பெற மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. தினந்தோறும் 90 உள்நோயாளிகள் இந்த உணவு வழங்கும் திட்டத்தால் பயன்பெறுவர். இதனால் கண்புரை மற்றும் பிரசவத்திற்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் நோயாளிகள் பயன்பெறுவதுடன் உள்நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து பொதுமக்கள் பயன்பெறுவர்கள்.
இவ்விழாவில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இணை இயக்குநர் மரு.சாந்தி, பாலக்கோடு அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர்கள் மரு.பாலசுப்ரமணியம், மரு.சிலம்பரசன், பணி மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக