இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச்சங்கம் சார்பில் 11 ஆவது ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள் எழுச்சி மாநில மாநாடு குறித்து தர்மபுரி மாவட்ட ஆலோசனை கூட்டம் பூபதி திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அப்புசாமி தலைமை வகித்தார் மாவட்ட பொருளாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார் நகர தலைவர மாதையன் வரவேற்றார் நகரச் செயலாளர் சாதிக் நகர பொருளாதார் அம்சு அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் சுரேஷ்குமார் மாநில துணைச் செயலாளர் ஜடையன் வேலூர் மாவட்ட தலைவர் வாசுதேவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார் முடிவில் செல்வம் நன்றி கூறினார்.
கூட்டத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச்சங்கம் மாவட்ட தலைவர் அப்புசாமி கூறுகையில், தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன இந்த அலுவலகம் மூலம் தினசரி ஆயிரம் கோடி அளவிற்கு பத்திரப்பதிவு செய்யப்படுகிறது இதன் மூலம் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது.
நில அளவை எளிமைப்படுத்த வேண்டும். நில வரையறையை ஒரு தெளிவு படுத்த வேண்டும். நிலத் ரகங்களை அமைப்புசாரா தொழிலாளர்கள் வாரியத்தில் சேர்க்க வேண்டும் .உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அரசுக்கு வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக